Vijay, Sivakarthikeyan, Tamil Cinema 22-June-2022

‘தல’ தயாரிப்பில் ‘தளபதி’ விஜய் படம்! பட்டைய கிளப்பும் மாசான தகவல்

தல – தளபதி இணையும் படம் குறித்த செய்தி!

தளபதி விஜய் தற்போது ‘தளபதி 66’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளநிலையில், மேலும் ஜூன் 22 ஆம் தேதி ‘தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Vijay, MS Dhoni, Thalapathy 68, Tamil Cinema 20-June-2022 001

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் அளவற்ற அன்பால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி தற்போது திரைப்படங்கள் தயாரிக்கும் திட்டத்தை கொண்டுள்ளார். அவருடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், ‘தளபதி 68’ திரைப்படத்தை அனேகமாக தோனியின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும் என்றும் சினிமா வட்டாரங்களின் தகவல்கள் தெருவிக்கின்றன.

Vijay, MS Dhoni, Thalapathy 68, Tamil Cinema 20-June-2022

அதுமட்டுமின்றி இந்த விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனியும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.