Kamal Haasan, Dance Master Shobi, Tamil Cinema 20-June-2022

கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்ற பிரபல நடன இயக்குனர்கள் தம்பதி! புகைப்படங்கள் வைரல்

கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்று வாழ்த்துக்கூறிய பிரபல நடன இயக்குனர்கள் தம்பதிகள்!

தமிழ் சினிமாவின் நடன இயக்குனர்களான தம்பதிகள் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதோடு, ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Kamal Haasan, Dance Master Shobi, Tamil Cinema 20-June-2022

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அனைத்து திரையுலகத்தினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து அவரிடம் ஆசி பெற்று வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் ஷோபி மற்றும் அவரது மனைவியும் நடன இயக்குநருமான லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் கமலஹாசனை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர். மேலும் ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Kamal Haasan, Dance Master Shobi, Tamil Cinema 20-June-2022 001

கமலஹாசன் நடித்த ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஷோபி நடன இயக்குநராக அறிமுகமானார் என்பதும் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும், அவர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.