Ajith, AK 61, Karthi, Sardar, Tamil Cinema 20-June-2022 001

அஜித் படத்துடன் மோத இருக்கும் இரு முன்னணி நடிகர்களின் படங்கள்!

அஜித்துடன் மோதும் நடிகர்கள்

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதே தினத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajith, AK 61, Karthi, Sardar, Tamil Cinema 20-June-2022 001

அஜித்தின் ‘ஏகே 61’ படத்தை தீபாவளி அன்று வெளியிடுவதற்காக படக்குழு அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறது. அந்தவகையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகழும் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்தியின் ‘சர்தார்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ஜெயம் ரவியின் ‘இறைவன்’ என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith, AK 61, Karthi, Sardar, Tamil Cinema 20-June-2022

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே வரும் தீபாவளியன்று அஜீத்தின் ‘ஏகே 61’ , கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ என மூன்று படங்கள் வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.