அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்தும் இதுவரை சம்பளத்தை ஏற்றாத பட நடிகை!

ஒரு வெற்றி படத்தில் நடித்தாலே தமது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றும் வழக்கம் பல நடிகை, நடிகர்களில் எப்போதும் உண்டு.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் தமிழில் அறிமுகமான பிரியங்கா மோகன், அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். பின்பு மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறையாக, அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் படத்தில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

Priyanka Mohan 20th June 2022

இவர் நடித்த டாக்டர், டான் இரண்டு திரைப்படங்களும் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வெகு சீக்கிரமே தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன், இதுவரை 50 லட்சம் மட்டுமே சம்பளமாகப் பெற்றிருக்கிறார். ஒரு ஹிட் படங்களை கொடுத்தாலே அடுத்தடுத்த படங்களில் பல மடங்கள் சம்பளத்தை ஏற்றும் கதாநாயகிகளின் மத்தியில், பிரியங்கா மோகன் தன்னுடைய சம்பளத்தை ஏற்றாமல் இருப்பது கோலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக போட்ட திட்டமாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டான் படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார். ஜெயிலர் என பெயரிடப்பட்டிருக்கும் தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் பிரியங்கா மோகன் மற்ற நடிகைகளைப் போல் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விடுவார் என கோடம்பாக்கத்தில் எதிர்ப்பார்க்கப்டுகிறது.