‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த செய்தி!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மெகா ஹிட்டான ‘விக்ரம்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 400 கோடி ரூபாயை எட்டும் நிலையில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த ஓடிடியில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி சரியாக ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஜூன் 3 ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெருவிக்கின்றன. இந்நிலையில் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘விக்ரம்’ படம், ஓடிடியிலும் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.