ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி – அடுத்தடுத்து வெற்றிக்கு தயாராக இருக்கும் படங்கள்!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்து வெளியாகவிருக்கும் அதிரடியான படங்கள்!

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் தொடர்ச்சியாக 3 திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில முக்கிய புள்ளிகளின் படங்களையும் இந்த ஆண்டிற்குள் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi, Red giant movies, Tamil Cinema 20-June-2022 001

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ‘விக்ரம்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் வசூல் செய்துள்ள நிலையில் இந்நிறுவனத்திற்கு அதிகளவான லாபம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi, Red giant movies, Tamil Cinema 20-June-2022

அதுமட்டுமின்றி தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ கார்த்தியின் ‘சர்தார்’ ஆர்யாவின் ‘கேப்டன்’ மற்றும் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ ஆகிய திரைப்படங்களையும் இந்த ஆண்டு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் கைப்பெற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.