சாய் பல்லவி சந்திக்கும் அடுத்த சங்கடம்?

சாய்பல்லவி சமீபத்தில் தெரிவித்த மத வன்முறை குறித்த கருத்துக்கு பலத்த ஆதரவும், இன்னொருபுறம் எதிர்ப்பும் தெரிக்கப்பட்டு வருகின்றது.

இது ஒருபுறமிருக்க வேறு ஒரு விடயம் குறித்து தற்போது சாய்பல்லவி கவலையில் உள்ளாராம்.

தெலுங்கு திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் சாய்பல்லவி நடிப்பில் Virata parvam என்ற தெலுங்கு படம் சமீபத்தில் வெளிவந்தது.

ஆனால் ரசிகர்களிடம் இத்திரைப்படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை, இதில் சாய் பல்லவி நடிப்பு மட்டுமே பாராட்டப்பட்டு வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தற்போது வரை ரூ 6 கோடி வரை தான் வசூல் வந்திருக்கிறது. இதனால் படம் மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்ததே சாய்பல்லவி தற்போது அதிகம் கவலைப்படுகிறாராம்.

Virata parvam