‘ஏகே 61’ படப்பிடிப்பு முடிவடைந்த பின் அஜித் முன்னெடுக்கும் திட்டம்! ‘ஏகே 62’ படப்பிடிப்பு எப்போ?

அஜித் ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இறங்கும் முக்கிய திட்டம் குறித்த தகவல்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Ajith, AK 61, AK 62, Tamil Cinema 20-June-2022

இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவுற்றதில் கிடைத்த ஓய்வு நேரத்தில் தற்போது இங்கிலாந்து நாட்டில் அஜித் பைக் பயணம் சென்றுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தற்போது அவர் பெல்ஜியம் உள்பட ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த திட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மீண்டும் வெளிநாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்ய அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வதே அவரது இலக்கு என்றும் தக்வான்கள் வெளிவந்துள்ளன.

Ajith, AK 61, AK 62, Tamil Cinema 20-June-2022 001

இந்த பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பின்பு தான் அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.