‘பிக்பாஸ்’ கவின் நடிக்கும் படத்தின் செம அப்டேட்!

கவின் படம் குறித்து வெளியான புதிய அப்டேட்!

நடிகர் கவின் ‘டாடா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே அறிந்தது.

Kavin, DADA, Tamil Cinema 20-June-2022 001

‘டாடா’ படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வரும் நிலையில், கணேஷ் பாபு என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

Kavin, DADA, Tamil Cinema 20-June-2022 001

இந்நிலையில் ‘டாடா’ படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மகனே என் கண்மணி என்ற இந்த பாடலை ஜென் மார்ட்டின் என்பவர் கம்போஸ் செய்ய, சத்தியநாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். ஆஷிக் ஏ.ஆர். எழுதிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.