‘தளபதி 66’ குறித்த மாஸான அறிவிப்பு!

விஜய் ரசிகர்கள் குதூகலம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thalapathy 66, Vijay, Tamil Cinema 20-June-2022

இந்நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தற்போது ‘தளபதி 66’ பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Thalapathy 66, Vijay, Tamil Cinema 20-June-2022

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.