யாஷ் படத்தில் இணையும் பிரபல விஜய் பட நடிகை!
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து சமீபத்தில் வெளியான ‘கேஜிஎப் 2’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நார்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாஷ் உடன் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியானால் முதல் முதலாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டே தற்போது ‘ஜனகனமன’ என்ற தெலுங்கு படத்திலும் ‘சர்க்கஸ்’ உள்பட இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.