‘ஏகே 61’ படம் குறித்து வெளியான அதிரடியான தகவல்!

‘ஏகே 61’ குறித்து வெளியான உற்சாகமான தகவல்!

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் – அஜித் கூட்டணி இணைந்திருக்கும் ‘ஏகே 61’ என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Ajith, AK 61, Tamil Cinema 16-June-2022

இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் மஞ்சு வாரியர் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பை ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முற்றாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.