மீண்டும் புதிய சாதனை படைத்த விஜய் பட பாடல் – ரசிகர்கள் குதூகலம்

விஜய் பாடல் மீண்டுமொரு சாதனை படைப்பு!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ருபா 236 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இப் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ மற்றும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ வீடியோ பாடல்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

Vijay, Arabic Kuthu, Beast, Tamil Cinema 16-June-2022

இந்நிலையில் ‘அரபிக்குத்து’ வீடியோ பாடல் யூடியூபில் சாதனை படைத்துள்ளது. விஜய்யின் ட்ரேட் மார்க் நடனம் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளல் நடனம் என ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் டாப் மியூசிக் வீடியோ ட்ரெண்டிங் லிஸ்டில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் குதூகலத்துடன் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ‘அரபிக்குத்து’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வரை 432 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.