12 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு டப்பிங் குரல் கொடுக்கும் வீடியோ வைரல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் தமிழ் படத்திற்கு டப்பிங் குரல்!

12 வருடங்களின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா டுப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரியும் வீடியோ வைரலாகி வருகிறது.

Aishwarya Rajinikanth, Tamil Cinema 16-June-2022

கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரீமா சென்னுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது .

Aishwarya Rajinikanth, Tamil Cinema 16-June-2022 001

மேலும் ஐஸ்வர்யா ரஜினி அந்த பதிவில் கூறுகையில், “நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு டப்பிங் தியேட்டரில் தமிழ் திரைப்படத்திற்காக குரல் கொடுக்கின்றேன் என்றும் தண்ணீரில் மீன்கள் ஓடுவது போன்றும் சந்தோசம் தனக்கு இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.