நடிகர் ஜெய் இசையில் தேவா படும் செம குத்து பாடல்! வீடியோ வைரல்

ஜெய் இசையில் முதல் முதலில் கான தேவா பாடிய பாடல் வைரல்!

சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவான ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜெயில்’ குத்துப்பாட்டு வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

jai, Sundar C, Pattampoochi, Deva, Tamil Cinema 16-June-2022 001

மேலும் ‘பட்டாம்பூச்சி’ படத்தில் கொடூரமான சைக்கோ வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜெய் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதும் அவர் கம்போஸ் பண்ணிய ‘ஜெயில்’ என்ற குத்துபாடலை இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேவாவின் குரலை ஒரு குத்துப் பாட்டின் மூலம் கேட்கவைத்த பெருமையும் ஜெய்யை சேரும்.

jai, Sundar C, Pattampoochi, Deva, Tamil Cinema 16-June-2022

பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவும், பென்னிஆலிவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.