‘தலைவர் 169’ படம் குறித்த வேற லெவல் அப்டேட் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி!

‘தலைவர் 169’ படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

இயக்குனர் நெல்சன் இயக்கம் படங்கள் என்றாலே அந்த படங்களில் ரெடின் கிங்ஸ்லி இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 169’ படத்திலும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth, Redin Kingsley, Thalaivar 169, Tamil Cinema 15-June-2022

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரெடின் கிங்ஸ்லி, ரஜ்னியின் ‘தலைவர் 169’ படத்தில் நீங்கள் நடிக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு ‘நெல்சன் இப்போதுதான் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார், முதல் பாதி தான் எழுதி முடித்திருக்கிறார். வெறித்தனமாக அவர் அந்த பணியில் ஈடுபட்டு வருவதால் அதன் பின்னர் தான் எந்தெந்த கேரக்டரில் யார் யார் நடிப்பார்கள் என்ற முடிவுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரெடின் கிங்ஸ்லி கூறியதில், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்ததாகவும் தமிழ் சினிமாவே கொண்டாட வேண்டிய ஒரு படம் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் பழைய ‘விக்ரம்’ படம் வந்தபோது சத்யம் தியேட்டரில் ராக்கெட் கட்டவுட் எல்லாம் வைத்தோம் என்றும் அவர் தனது பழைய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘காபி வித் காதல்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருவதாகவும் அனைத்து படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வருவதாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் காமெடி செய்வதே தனது விருப்பம் என்றும் அந்த பேட்டியில் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.