இயக்குனர் நெல்சன் குறித்து வந்த மீம்ஸ்க்கு ஆர்.ஜே பாலாஜியின் வேண்டுகோள்!

ஆர்.ஜே. பாலாஜி நெல்சன் குறித்து தெரிவித்த பதிவு!

தமிழ் சினிமாவில் நெல்சன் திலீப்குமார் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதை தொடர்ந்து ‘டாக்டர்’ படம் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் ஆவர். ஆனால் அவர் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நெடிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் குறித்த மீம்ஸ் அதிகமாக வைரலாகி வருகிறது.

Nelson Dilipkumar, R.J. Balaji, Tamil Cinema 14-June-2022

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் குறித்த மீம்ஸ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, “நெல்சன் ஒரு அருமையான இயக்குனர். நான் அவருடன் பல நிகழ்ச்சியில் பணியாற்றி இருக்கிறேன். நான் அவருடைய படங்களின் தீவிர ரசிகன்.

அவர் ஒரு வியக்கத்தக்க திறமையை கொண்டவர். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவார் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற மீம்ஸ்களை நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் குறித்து ஆர்.ஜே. பாலாஜி பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.