வெளியான நயன்தாரா பட ப்ரோமோ வீடியோ!
நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடித்த படத்தின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகிய திரைப்படமான ‘O2’ என்ற இந்த படம் வரும் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ‘வானம் தாவும்’ என்ற ஆரம்பிக்கும் இந்த பாடலை தரன் என்பவர் எழுத பிரதீப்குமார் பாடியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த மெலடி பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.