அவசர அவசரமாக அமெரிக்கா சென்ற சிம்பு – டி. ராஜேந்தருக்கு என்னாச்சு?

டி.ஆர் ராஜேந்தர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்நிலையில் டி. ராஜேந்தரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பது அறிந்ததே. இந்நிலையில் நடிகர் சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார்.

Simbu, T.R. Rajendar, Tamil Cinema 13-June-2022

இதனை தொடர்ந்த டி. ராஜேந்தர் உடல் நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்றும் அதில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னப்படி டி.ஆர் அமெரிக்கா செல்லவில்லை. இதனால் என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும், விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதும் தான் டி.ஆர் அமெரிக்கா செல்ல தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் விசா கிடைத்து விட்டதாகவும் 14 ஆம் தேதி அதாவது நாளை டி.ஆர் அமெரிக்கா புறப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டி.ஆர் செல்வதற்கு முன்பாகவே, நடிகர் சிம்பு அமெரிக்கா சென்று விட்டார். மருத்துவ ஏற்பாடுகளை கவனிக்கவே சிம்பு அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டி.ஆரின் உடல்நிலையை நினைத்து வருத்தத்தில் உள்ள ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.