பிரபல நடிகரின் மகனும், நடிகையின் சகோதரருமானவர் கைது!
பிரபல நடிகையின் சகோதரர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விருந்தில் நேற்றிரவு கலந்து கொண்டார். இந்த விருந்தின்போது அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தா கபூர் மற்றும் சித்தார்த் கபூர் ஆகிய இருவரும் பிரபல பாலிவுட் நடிகர் ஷக்தி கபூரின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.