‘சிட்டில அகிலன் தான் இல்லீகல் கிங்’ ஜெயம் ரவியின் ‘அகிலன்’ டீஸர்!

ஜெயம் ரவி நடிக்கும் ‘அகிலன்’ பட டீஸர்!

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Agilan, Jayam Ravi, Tamil Cinema 11-June-2022 001

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில், கணேஷ்குமார் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தின் டீஸர் அரவரையும் ஈர்த்து வருகிறது. முழுக்க முழுக்க ஹார்பரை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் ஒட்டுமொத்த ஹார்பரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இதில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Agilan, Jayam Ravi, Tamil Cinema 11-June-2022

இந்த டீசரில் கடைசியில் ‘கடலில் இருந்து உப்பை கூட பிரித்து விடலாம், ஆனால் ஹார்பரில் இருந்து அகிலனை பிரிக்க முடியாது என்று ஜெயம் ரவி பேசும் மாஸ் வசனத்துடன் டீசர் முடிவுக்கு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக இந்த டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

adbanner