25 நாட்களில் சிவகார்த்திகேயனின் டான் செய்த மொத்த வசூல்!

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன.

லைகா நிறுவனம் முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து படம் டான். இப்படம் சில நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வரை வசூத் சாதனை செய்தது.

தற்போது 25 நாளில் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு- ரூ. 85.70 கோடி
வெளிநாடு- ரூ. 25 கோடி
ஆந்திரா- ரூ. 6.70 கோடி
கர்நாடகா- ரூ. 5.95 கோடி
கேரளா- ரூ. 1.75 கோடி
வட மாநிலம்- ரூ. 0.70 கோடி
மொத்தமாக படம் உலகம் முழுவதும் 25 நாட்களில் ரூ. 125.80 கோடி வரை வசூலித்துள்ளது.