சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 169’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. ஆனால் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் திலீப்குமார் ரஜினி இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணியில் நெல்சன் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற, ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமாரை ரஜினிகாந்த் நியமனம் செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தலைவர் 169 படத்திற்கு 250 கோடி பட்ஜெட்டை நெல்சன் முதலில் கூறியுள்ளார். தற்போது நெல்சன் மீது சன் பிக்சர்ஸ் இருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லாததால் படத்தில் 150 கோடி மட்டுமே கொடுக்கப்படும் மற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட நெல்சன் தன்னுடைய கதைக்கு 100 கோடி பட்ஜெட்டில் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க முடியுமா என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இருவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை பற்றி பேசியுள்ளனர். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்திற்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தருவதாக கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தில் நெல்சன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு இருந்த நிலையில், அதை ரஜினி பிறகு உறுதி செய்தார். அப்போது முதல் இப்போது வரை நெல்சனின் மீது நம்பிக்கை இல்லாத சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை ரஜினிகாந்த் தொடர்ந்து சமாதானம் செய்து கொண்டிருப்பதால், தற்போது மீண்டும் பட்ஜெட்டில் கைவைத்த சன் பிக்சர்ஸின் மீது சூப்பர் ஸ்டார் பெரும் சங்கடத்தில் உள்ளார்.
ஆனால் இது நெல்சனை கழட்டிவிட மேட்கொள்ளும் பக்கா பிளான் என திரைவட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.