கைதில செத்தவரு எப்படி ‘விக்ரம்’ படத்தில வந்தாரு? லோகேஷ் கூறிய வேற லேவல் தகவல்!

கைதியில் இறந்தவர் விக்ரம் படத்தில் வருவது குறித்து லோகேஷ் கொடுத்த விளக்கம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் உருவான ‘விக்ரம்’ படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை செய்து வருகிறது. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா உட்பட படக்குழுவினர் பலருக்கு பெறுமதி மிக்க பரிசளித்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal, Vikram, Lokesh Kanagaraj, Tamil Cinema 09-June-2022

இந்நிலையில் நேற்றைய தினம் ‘விக்ரம்’ படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்தார். ரசிகர் ஒருவர், அப்போது “கைதியில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரமான அன்பு எப்படி விக்ரம் படத்தில் உயிருடன் வந்தார்? இதை நம்ப முடியவில்லை” என கேட்டிருந்தார்.

Kamal, Vikram, Lokesh Kanagaraj, Tamil Cinema 09-June-2022 001

அதற்கு பதிலளித்த லோகேஷ், “கைதியில் நெப்போலியனால் அன்புவின் தாடை மட்டும் உடைந்தது, அதனால் விக்ரமில் அந்த இடத்தில் தையல் குறி இருக்கும். இது குறித்து கைதி 2இல் மேலும் தெரியவரும்” என லோகேஷ் கூறினார். இதே போல் ரசிகர்களின் மேலும் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.