அஜித்தின் விமானநிலையம் மற்றும் விமானத்துக்குள் எடுத்த உப்புகைப்படங்கள் வைரல்!
அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கிய நிலையில், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையப்படுத்திய கதை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வங்கி போன்று போடப்பட்ட செட்டில்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக படக்குழு உறுதி செய்துள்ளனர்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு கட்டங்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் தற்போது தனது காட்சிகளை அங்கு நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அஜித் விமானத்தில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.