மகனின் உயிர் – தாயின் கோபம் வெளியான நயன்தாரா பட அதிரடியான டிரைலர்!

நயன்தாராவின் புதிய படத்தின் அதிரடியான டிரைலர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘O2’ திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஏராளமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Nayanthara, O2, Tamil Cinema 07-June-2022

இந்த டிரைலரில் ஒரு பேருந்தில் நயன்தாரா தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த பேருந்து மண்ணில் மூழ்கி விடுகிறது. இந்த பேருந்தை கண்டுபிடிக்க மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மண்ணில் மூழ்கியுள்ள பேருந்தில் உள்ள பயணிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நயன்தாராவின் குழந்தைக்கு ஏற்கனவே ஆக்ஸிஜன் பிரச்சினை இருக்கும் நிலையில் அவர் எப்படி தனது குழந்தையை புதைந்த பேருந்தில் இருந்து வெளியில் கொண்டுவந்து காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. ‘எந்த ஒரு தாயும் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா’ என்ற வசனத்துடன் நிறைவடையும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் விஷால் சந்திரசேகர் இசையில், தமிழழகன் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளனர்.

adbanner