‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு!

‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த நடிகரின் பதிவு வைரல்!

எச். வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணா சாலை போன்ற செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Ajith, Veera, AK 61, Tamil cinema 06-June-2022

அந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறும் என்றும், புனேவில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தல அஜித் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் நடிகர் வீரா முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த நிலையில் அவர் தனது பகுதியின் படப்பிடிப்பு முடித்து விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, அஜித்தை பெருமைப்படுத்தும் வகையில் கூறி, படக்குழுவினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, “இந்த மனிதருடன் சில நாட்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும், நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பலவருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை ஒரு உச்ச நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

அன்புள்ள ஏகே சார், நாம் மீண்டும் சந்திக்காமல் போனால், தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நான் பழகிய நாட்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் இயல்பில் இருக்க விட்டீர்கள். உங்களை சுற்றி உள்ள எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என நீங்கள் விரும்புவது போல் உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.