சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் அசத்தலான போஸ்டர் ரிலீஸ்!

சுந்தர் சி படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீடு!

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘அரண்மனை 3’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

Coffee With Kadhal, Jeeva, Jai, Sundar C, Dhivyadharshini, Tamil Cinema 06-June-2022

சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்ததையடுத்து, இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் டிடி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அதிகளவான படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்தது என்பதும் இந்த படத்தை சுந்தர் சி – குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ்’ தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Coffee With Kadhal, Jeeva, Jai, Sundar C, Dhivyadharshini, Tamil Cinema 06-June-2022 001

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ‘காபி வித் காதல்’ என்று அறிவிக்கப்பட்டதோடு, அசத்தலான போஸ்டரும் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரில் இப்படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் இருப்பதை தொடர்ந்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Coffee With Kadhal, Jeeva, Jai, Sundar C, Dhivyadharshini, Tamil Cinema 06-June-2022 003
adbanner