‘ஏகே 61’ படத்தில் புதிதாக இணையும் நடிகர்கள் – படப்பிடிப்பு தளம் குறித்த தகவல்!

‘ஏகே 61’ படத்தின் புதிய அப்டேட்

தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளதையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு மற்றும் இந்த படத்தில் இணையும் நடிகர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

AK 61, Ajith Kumar, Manju Warrier, Tamil Cinema 06-June-2022

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘ஏகே 61’ படம் ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணா சாலை செட் போடப்பட்டு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதும் சாலை செட்டில் நடைபெறவேண்டிய படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், இதை தொடர்ந்து அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

AK 61, Ajith Kumar, Manju Warrier, Tamil Cinema 06-June-2022 001

மேலும் புனே படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியர் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. புனே படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் மகாநதி சங்கர், பகவதி பெருமாள் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AK 61, Ajith Kumar, Manju Warrier, Tamil Cinema 06-June-2022 002