ரஜினி விக்ரம் படம் பார்த்து கமல் உட்பட படக்குழுவுக்கு கூறியது!
உலகநாயகன் கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெருவித்தக தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடன்ஹா 3 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் 40 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கும் படக்குழுவினருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘விக்ரம்’ படத்தை பார்த்து கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் ரொம்ப சூப்பராக உள்ளது என தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தின் ரிலீசுக்கு ஒரு சிலநாட்களுக்கு முன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.