விக்ரம் படத்தில் நடித்த சூர்யா குறித்த தகவல்
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறதோடு படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் வரும் ரோலக்ஸ் கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருந்தார் என்றும், அவரது இந்த காட்சிகள் மாஸ் ஆக இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க ஒரே ஒரு நாள் மட்டும் சூர்யா கால்ஷீட் கொடுத்திருந்ததாகவும், ஐந்து நிமிடங்களே வரும் இந்த காட்சியில் நடிப்பதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்பதால் அந்த படத்திற்கு அதிகளவு சம்பளம் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெருவிக்கின்றன.