சமந்தாவின் டேட் நைட் யாருடன் தெரியுமா? புகைப்படம் வைரல்!

சமந்தாவின் டேட்டிங் புகைப்படம் வைரல்!

நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் டேட் நைட் செல்வதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha, Tamil Cinema 04-June-2022 001

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா என்பதும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ‘சாகுந்தலம்’, ‘யசோதா’, ‘குஷி’ போன்ற மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை அவதானித்திருக்கிறோம்.

Samantha, Tamil Cinema 04-June-2022

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான ப்ரிதம் ஜூகல்கர் மற்றும் சாதனா சிங் ஆகியோர் உள்ளனர். தனக்கு நெருக்கமான இந்த நண்பர்களுடன் டேட் நைட் செல்வதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.