‘விக்ரம்’ ரிலீஸான முதல் நாளே கமலுக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன பிரபலம்!

விக்ரம் படத்தின் சக்சஸ்ஸுக்கு கமலுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய பிரபலம்!

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், அனைத்து ஊடகங்களும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘விக்ரம்’ படம் வெற்றி ஒருவது உறுதியாகிவிட்டது.

Kamal, Vikram, Udhayanidhi, Tamil Cinema 04-June-2022

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை முதல் நாளை கொண்டாடிய தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மலர்க்கொத்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Kamal, Vikram, Udhayanidhi, Tamil Cinema 04-June-2022

உதயநிதி ஸ்டாலின் கமலை சந்தித்தது குறித்து அவரின் டுவிட்டரில் தெரிவித்திருப்பது, “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல் சாரை நேரில் சந்தித்து ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் ‘விக்ரம்’ நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும்” என்று பதிவிட்டுள்ளார்.