ஸ்ருத்திகா அர்ஜுன் புதிய போட்ஷூட் படங்கள் 4 ஜூன் 2022

Shrutika Arjun 04 – 06 – 2022

Shrutika Arjun – 4th Jun 2022 – தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தோன்றிய ஒரு தென்இந்திய நடிகை ஆவார். ஸ்ருத்திகா அர்ஜுன் தமிழ்நாட்டில் 1986 இல் பிறந்தார். இவர் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.

ஸ்ருத்திகா 2002 இல் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு ராஜேஷுடன் இயக்குனர் வசந்தபாலனின் ஆல்பம் படத்திலும், மாதவனுடன் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த நள தமயந்தி படத்திலும், ஜீவாவுடன் தித்திக்குதே படத்திலும் தமிழில் நடித்திருந்தார்.
.
சுரேஷ் கோபியுடன் ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள நகைச்சுவைத் திரைப்படத்தில் மலையாளத்தில் அறிமுகமானார். இப்போது ஸ்ருத்திகா , ​​ஸ்டார் விஜய்யின் குக்கு வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக பங்கு பற்றி வருகின்றார். இது 22 ஜனவரி 2022 இல் தொடங்கியது. அம்மு அபிராமி, அந்தோணி தாசன், மனோபாலா மகாதேவன், ரோஷ்னி ஹரிப்ரியன், வித்யுல்லேகா ராமன் மற்றும் பலருடன் அவர் போட்டியில் போட்டியிடுகிறார்.