‘ஏகே 61’ படத்தில் அஜித்தின் கேரக்டரை கசியவிட்ட ஸ்டண்ட் கலைஞர்!

‘ஏகே 61’ குறித்து கசிந்த தகவல்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘ஏகே 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்று பிரமாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் ஒரு வங்கி கொள்ளை கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.

Ajith, AK 61, Tamil Cinema 04-June-2022

மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் அவரே ஹீரோவாகவும் அவரே வில்லனாகவும் நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அஜீத்துடன் இந்த படத்தில் பணிபுரியும் சண்டை கலைஞர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது. அதில் ஒரு ஸ்டண்ட் கலைஞர், அஜீத் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறி இருக்கிறார். இதனை அடுத்து ஏகே 61 இல் அஜீத்தின் ஒரு கேரக்டர் வில்லன் என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ajith, AK 61, Tamil Cinema 04-June-2022 001

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, ஜிப்ரான் இசையில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

adbanner