பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை!

பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்க வரும் நடிகை!

தமிழ் உள்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய புகழ் பெற்று மக்கள் மத்தியில் வரவேற்ப்பையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha, Nagarjuna, Bigg Boss Tamil, Tamil Cinema 04-June-2022 001

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து 6வது சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியும் தொடங்கி விட்டதாக கூறப்படும் வேளையில். பிக்பாஸ் 5 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 6வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குவாரா? அல்லது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தொகுத்து வழங்குவாரா? என்பது எதிர்பார்ப்பில் உள்ளது. அதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samantha, Nagarjuna, Bigg Boss Tamil, Tamil Cinema 04-June-2022

ஏற்கனவே சமந்தா ஒரே ஒரு நாள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் என்பதும் அந்த எபிசோடுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.