சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ‘எஸ்கே 21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

Sivakarthikeyan, Kiara Advani, Tamil Cinema 04-June-2022 001

இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே 22’ படத்திலும், ‘மண்டேலா’ படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் ‘எஸ்கே 23’ படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan, Kiara Advani, Tamil Cinema 04-June-2022

மேலும் ‘எஸ்கே 23’ திரைப்படம் நையாண்டி மற்றும் அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்றும், இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan, Kiara Advani, Tamil Cinema 04-June-2022 002

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.