‘தளபதி 67’ படத்தில் விஜயுடன் மீண்டும் நாயகியாக இணையும் நடிகை!

லோகேஷ் கனகராஜின் ‘தளபதி 67’ படத்தின் நாயகி!

தளபதி விஜய்யுடன் நடித்த நடிகை மீண்டும் ‘தளபதி 67’ இல் இனைய இருக்கிறார் என்ற செய்தி வைரலாகிவருகிறது.

லோகேஷ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் விஜய்யின் ‘தளபதி 67’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்காக சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்யுடன் ஏற்கனவே ‘தெறி’, ‘கத்தி’ மற்றும் ‘மெர்சல்’ போன்ற படங்களில் நடித்துள்ள சமந்தா, தற்போது 4 வது முறையாக விஜய்யுடன் ‘தளபதி67’ படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version