சாய் தன்ஷிகா புதிய போட்ஷூட் படங்கள் 3 ஜூன் 2022

Sai Dhanshika 03 – 06 – 2022

Sai Dhanshika – 3rd Jun 2022 – ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் 2009 இல் அறிமுகமானார். தொடர்ந்து மாஞ்ச வேலு, அரவான், பரதேசி, யா யா, கபாலி, சோலோ, விழித்திரு, இருட்டு மற்றும் லாபம் ஆகிய படங்களில் நடித்தார். சாய் தன்ஷிகா தற்போது சினிமாவில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவர் நடிக்கும் படத்துக்கு ‘மனோகரி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மனோகரி’ படத்தை நவாஸ் அகமது எழுதி இயக்கியுள்ளார். சினேகனின் மனைவி கன்னிகா சினேகன் கதாநாயகியாகவும், ஸ்டண்ட் மாஸ்டர் கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் வில்லனாகவும் அறிமுகமாகிறார். மற்ற இணை நடிகர்கள் பிரின்ஸ், கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குட்டன் முத்து மற்றும் பலர்.

இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் மற்றுமொரு படம் ‘யோகி டா’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.