பிரபு சாலமனின் ‘செம்பி’ பட டிரைலரை வெளியிடும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் பட டிரைலரை வெளியிடுகிறார்!

தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் மூலம் தனக்கான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் அவரின் ஒருசில படங்கள் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sembi, Ashwin Kumar, Tamil Cinema 03-June-2022

இந்நிலையில் அவரின் தற்போதைய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்றய படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படும் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். இந்நிலையில் படத்துக்கு ‘செம்பி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இந்த டிரைலரை பிரபல நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Sembi, Ashwin Kumar, Tamil Cinema 03-June-2022 001