அட்லி-ஷாருக்கான் கூட்டணியின் ‘ஜவான்’ டீசர் – ரிலீஸ் தேதியும் வெளியானது!

ஷாருக்கான் படத்தின் டீஸர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வேற லெவலில் வெளியாகியுள்ள இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Jawan, Shah Rukh Khan, Nayanthara, Tamil Cinema 03-June-2022 001

ஷாருக்கான் அதிரடியான கெட்டப்பில் இருக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம் அடுத்த வருடம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jawan, Shah Rukh Khan, Nayanthara, Tamil Cinema 03-June-2022

மேலும் இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே வெளியான தகவலின்படி ‘ஜவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டீசரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், யோகி பாபு உள்பட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.