‘கைதி 2’ ஆரம்பிப்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்ட தயாரிப்பாளர்!

கைதி 2 படம் குறித்து வெளியான தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi, Kaithi 2, Tamil Cinema 03-June-2022

மேலும் ‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்திற்கு தொடர்புள்ள ஒருசில காட்சிகள் படமாக்க பட்டுள்ளதை படம் பார்த்தவர்கள் சரியாக அவதானித்துள்ளனர். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ‘கைதி’ படத்தை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ படத்தை பாருங்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கலாங்களா? என ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து ‘கைதி 2’ திரைப்படம் விரைவில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘கைதி’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக இருந்ததாய் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.