‘விக்ரம்’ படத்திற்கு வருகை தந்த படக்குழு – வைரலாகும் புகைப்படம்!

விக்ரம் படம் பார்க்க சென்ற பிரபலங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ‘சந்தானம்’ என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram, Tamil Cinema 03-June-2022

இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்த்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் திரையரங்கு முன்பு கட்டவுட் மற்றும் பேனர்கள் வைத்து அளப்பறையுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ‘விக்ரம்’ படக்குழு ரசிகர்களோடு ரசிகர்களாக படத்தை பார்த்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், நடிகர் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் ‘விக்ரம்’ படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.