‘விக்ரம்’ படத்தின் 3 பிரபலங்களின் மாஸ் என்ட்ரி – அனல் பறக்கும் விசில்!

மூன்று பிரபலங்களுக்கும் வேற லெவல் என்ட்ரி கொடுத்துள்ள லோகேஷ்!

விக்ரம் படத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ஓபனிங் சீனை பார்த்து ஆரவாரத்தில் கொண்டாடிய ரசிகர்கள்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. 4 வருடங்களிற்கு பிறகு கமலின் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் ஆரவாரத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 03-June-2022 004

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் ஓபனிங் சீனாக அவருடைய மிரட்டல் கண்கள் காட்டப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் கார்டிலேயே உலக நாயகன் கமல் ஹாசன் என அவருடைய கண்களை காட்டி ரசிகர்களை அலறவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதேபோல் விஜய் சேதுபதிக்கும் மாஸான ஓபனிங் கொடுத்த மிரட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி, போலீஸாரால் ஆட்டோவில் அழைத்து செல்லப்படும் போது, துப்பாக்கியை வெடிக்கச் செய்கிறார். இதனால் நிலைகுலைந்து புரண்ட ஆட்டோவில் இருந்து முதுகு முழுக்க டாட்டூஸுடன் பேக் போஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுக்கிறார் விஜய்சேதுபதி. இந்தக்காட்சியை பார்த்த ரசிகர்கள் விசில் சத்தத்தால் திரையரங்கை அதிர வைத்தனர்.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 03-June-2022 003

அடுத்து ஃபகத் ஃபாஸில் இன்வெஸ்ட்டிகேஷன் ஆபிஸராக வரும் காட்சிகளில் தனது விறுவிறுப்பான விசாரணையால் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். முதல் பாதி படத்தின் ஹீரோவே அவர்தான் என கூறிவருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் நடிகர் சூர்யாவின் ஓபனிங் காட்சியையும் பாராட்டி வருவதுடன் அவரின் என்ட்ரி கமல் ரசிகர்கள் மட்டின்றி சூர்யா ரசிகர்களுக்கும் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுரவத் தோற்றம் என்றாலும் கச்சிதமான கேரக்டர் தேர்வு என்று தெரிவித்துள்ளனர். விக்ரம் 3 படத்தில் சூர்யாதான் லீட் ரோலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.