‘விக்ரம்’ படத்தின் மைனஸ் அது மட்டும் தான் – அனால் ‘விக்ரம்’ வேற லெவல்!

விக்ரம் படத்தின் மைனஸ் குறித்து எழுந்த விமர்சனம்!

கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்துள்ள நிலையில், பாஸிட்டிவ் விமர்சனங்களாகவே குவிந்து வருகிறது.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 03-June-2022 001

‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக அமைந்துள்ளது. கதாப்பாத்திரங்கள் தேர்வு, ஸ்க்ரீன் ப்ளே, டிவிஸ்ட்டுகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அணுஅணுவாக செதுக்கியுள்ளார் லோகேஷ் என சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்து வரும் நிலையில், படத்தில் உள்ள மைனஸ் குறித்த கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி கைதி படம் பார்க்காதவர்களுக்கு விக்ரம் படத்தின் சில காட்சிகள் கனெக்ட் ஆகாமல் போகலாம்.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 03-June-2022

ஆகையால் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்திற்கு செல்லுங்கள் என ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறிப்பிட்டிருந்ததால் அந்த விஷயத்தில் அவரை குறை சொல்ல முடியாது. ரகசிய ஏஜென்ட்டாக சந்தான பாரதி, வீட்டில் வேலை செய்யும் பெண் திடீரென சண்டை போடும் காட்சியெல்லாம் தேவையில்லாதது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் படத்தின் கான்செப்ட்டை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறியிருக்கலாம். மேலும் விக்ரம் படத்தின் கான்செப்ட்டும் கைதி படத்தின் கான்செப்ட்டும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஆனால் ஸ்க்ரீன்ப்ளே படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பதால் இந்த சின்ன சின்ன மைனஸ்கள் கூட பெரிதாக எடுத்து காட்டவில்லை என்று கூறப்படுகிறது.