ரஜினி – அஜித் சந்திப்பின் காரணம்
ரஜினிகாந்த்தை நடிகர் அஜித் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் வைரலாகி வரும் தகவலுக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை அவ்வப்போது பிரபல நடிகர்கள் சந்தித்து வருகிறார்கள் என்பது சமூக வலைத்தளங்கள் மூலம் பார்க்கமுடிகிறது. நேற்று நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் நடிகர் அஜித் நேற்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்படுவதோடு, இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. அந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ரஜினியை அஜித் சந்தித்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என்றும் இணையதளத்தில் உலாவரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.