நீண்ட காலத்துக்கு பின் விட்டதைப் பிடித்தார் ‘விக்ரம்’ கமல்

Vikram Movie Review 03 – 06 – 2022

காவல் துறையில் இருப்பவர்களை முகமூடி கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் காவல் துறைக்கு சம்பந்தம் இல்லாத காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார்கள். இக் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்டாக இருக்கும் பகத் பாசிலிடம் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. முகமூடி கும்பல் பற்றிய தகவல் சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் முகமூடி கும்பல் காவல் துறையினரையும் கமலையும் கொல்ல காரணம் என்ன? பகத் பாசில், முகமூடி கும்பலை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Vikram Movie Review

ஹீரோ கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்துள்ளார். மகனையும் பேரனையும் நினைத்து கவலைப்படும் பாசக்காரராக நடிப்பில் அசத்துகிறார். அதேபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை மிரள வைக்கிறார். கமலுக்கு அடுத்து அனைவரையும் கவர்கிறார் பகத் பாசில். முதல் பாதியை தன் வசப்படுத்தியுள்ளார். சிறு அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி வழமை போன்று ஆர்ப்பாட்டம் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. காயத்ரி, மைனா, ஷிவானி, மகேஷ்வரி ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள். தனக்கான பாணியில் ரசிகர்களை கவர்கிறார் நரேன். சூர்யாவின் மாஸ் சீன் வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.

கைதி, மாஸ்டர் போல போதை பொருளை மையமாகக்கொண்டு பழிக்கு பழி, ஆக்ஷன் என திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாபாத்திரங்களை திறமையாக தெரிவு செய்து இருக்கிறார் இயக்குனர். அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அசத்தல்.

நீண்ட காலத்துக்கு பின் விட்டதைப் பிடித்தார் ‘விக்ரம்’ கமல்.