பிரபல மாஸ் நடிகரின் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்த முதலமைச்சர்!

முதலமைச்சர் வரி விலக்கு அளித்த பிரபல நடிகரின் படம்!

பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் நடித்திருந்ததும், ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படமான ‘சாம்ராட் பிரித்விராஜ்’ ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Samrat Prithviraj, Akshay Kumar, Tamil Cinema 03-June-2022

இப்படம் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி ஷில்லார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தப் படத்தை தனது கேபினட் அமைச்சர்களுடன் பார்த்தார். படம் பார்த்து முடித்தவுடன் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்ததோடு இந்த படத்திற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samrat Prithviraj, Akshay Kumar, Tamil Cinema 03-June-2022 001