‘விக்ரம்’ படத்தின் இடைவேளையில் வரும் மாஸ் பட டிரைலர்!

விக்ரம் படத்தின் இடைவேளையின் போது வெளியாக இருக்கும் டிரைலர்!

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளின் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Vijay Sethupathi, Shivani Narayanan, Andrea, Vikram, Tamil Cinema 11-Apr-2022

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் இடைவேளையில் சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளனர். இது ‘மாயோன்’ படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக பார்க்கப்படுகிறது.

சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயோன்’ திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ‘விக்ரம்’ படத்தின் இடைவேளையில் வெளியாககுவதால் இப்படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.