வெளிநாடொன்றில் முன்பதிவில் பிரம்மாண்ட சாதனை படைத்த ‘விக்ரம்’

Vikram Celebrations

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram, Kamal Haasan, Vijay Sethupathi, Tamil Cinema, Lokesh Kanagaraj, 2nd june 2022

தற்போது விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முன்பதிவில் UAE-ல் விக்ரம் படைத்துள்ள பிரம்மாண்ட சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி UAE-ல் விக்ரம் முன்பதிவில் மட்டும் 25000 டிக்கெட்ஸ் விற்கப்ட்டுள்ளது.